India
“5 ஆண்டில் ஒரு மலக்குழி மரணம் கூட நிகழவில்லை” : ஆதாரங்கள் இருக்கும் போதே கூசாமல் பொய் பேசும் மோடி அரசு!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், பெட்ரோல் - டீசல் உலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேசாமல் ஒன்றிய அரசு மவுனம் காத்து வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகளையும் பேசவிடாமல் தடுத்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எல்.ஹனுமந்தய்யா ஆகியோர், நாட்டில் எத்தனை பேர் மலக்குழியில் மரணமடைந்துள்ளனர் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஒன்றிய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதில் அளித்து பேசும் போதும், “கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் மலக்குழி மரணங்கள் ஒன்றுகூடப் பதிவாகவில்லை” என கூறினார். ஒன்றிய அமைச்சரின் இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும், இதே கேள்வி “ 19 மாநிலங்களில் மட்டும் 340 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று ஒன்றிய அரசு புள்ளிவிவரம் அளித்திருந்தது. ஆனால், மழைக்காலக் கூட்டத்தொட ரில் எழுப்பப்பட்ட அதே கேள்விக்கு, ஒரு மரணம் கூட நிகழவில்லைர் என மோடி அரசு பதிலளித்துள்ளது. நான்கு மாதத்திற்கு உள்ளாகவே - அதுவும் நாடாளுமன்றத்திலேயே புள்ளிவிவர மோசடியை மோடி அரசு அரசு அரங்கேற்றியுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !