India
காதலியைச் சுட்டுக் கொன்று காதலனும் தற்கொலை : ‘பிரேக்கப்’ விவகாரம் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்தவர் பி.வி.மானசா. இவர் மருத்துவம் படித்து முடித்துவிட்டு வீடு வாடகை ஒன்று எடுத்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று ராகில் என்பவர் மானசாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, மானசாவை தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு திடீரென அந்த அறையிலிருந்து அடுத்தடுத்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து மானசாவுடன் இருந்த மற்ற மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து அந்த அறையின் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.
பின்னர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மருத்துவர் மானசாவும், ராகிலும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து ராகிலின் நடத்தை பிடிக்காததால் மானசா காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகில் அடிக்கடி மானசாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில்தான் ராகில், மானசாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!
-
288 Iconic Projects : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்!
-
கம்பீரின் ஆதரவால் அணிக்குள் வந்தாரா ஆயுஷ் பதோனி? - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு!
-
சென்னையில் 1980-களை நினைவுபடுத்தும் ‘VINTAGE BUS’! - மக்கள் பயன்பாட்டிற்காக 5 பேருந்துகள் அறிமுகம்!