India

“ஊடகங்களை ஒடுக்கும் உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடியும் இடம் பிடிப்பு” : பா.ஜ.க அரசை சாடும் ‘RSF’!

இந்தியாவில் 2014ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நாள் முதல் இன்று வரை ஊடகத்திற்கான சுதந்திரத்தை நசுக்கப்பட்டே வருகிறது. மேலும், பா.ஜ.க அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பத்திரிகையாளர்களை, தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.

அதேபோல், மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் இந்துத்துவா கும்பலால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இப்படிப் மோடி ஆட்சியல் பாதுகாப்பற்ற சூழ்நிலையில்தான் பத்திரிக்கையாளர்கள் இந்தியாவில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், உலகளவில் ஊடக சுதந்திரத்தை நசுக்கும் தலைவர்களின் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. Reporters Without Borders (RSF) என்ற அமைப்பு உலகம் முழுவதும் ஊடக செய்திகளுக்குத் தணிக்கை முறையை ஏற்படுத்துவது, பத்திரியாளர்கள்களை சிறையில் தள்ளுவது அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவீழ்த்து விடுவது அல்லது நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்தியாளர்களின் மரணத்திற்குக் காரணமாக அமைவது போன்றவை குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.

இதன் முடிவுகளை Gallery of Grim Portraits என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள தலைவர்களில் 37 பேர் ஊடகங்களின் சுதந்திரத்தை நசுக்குகிறார்கள் என RSF அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதில் இந்திய நாட்டின் பிரதமர் மோடியின் பெயரையும் இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த அமைப்பு ஏற்கனவே இதேபோன்று 2016ம் ஆண்டில் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது. பிறகு ஐந்தாண்டுகள் கழித்து வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பட்டியலில் ஊடகங்களை ஒடுக்கும் பட்டியலில் 17 பேர் புதிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டிள்ளது.

மேலும், 2014ம் ஆண்டு பிரதமராகப் மோடி பதவியேற்ற நாள் முதல் ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்து வருவதாக RSF அமைப்பு குற்றம் சாட்டியது மட்டுமல்லாமல், முதல்வராக இருந்தபோதே ஊடகங்களை நசுக்குவதற்குக் குஜராத் மாநிலத்தை ஆய்வுக் கூடமாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளது.

பின்னர் பிரதமராகப் பதவியேற்ற பின் ஊடகங்களில் சாமானிய மக்களுக்கான ஆதரவு நிலைப்பாடு போன்ற தேசிய கொள்கை பேச்சுகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை அதிகப்படியாகப் பரவ விடுதல் போன்றவற்றைக் கொள்கையாகக் கொண்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஊடக நிறுவனங்களை நடத்தும் பெரு முதலாளிகளுடன் பிரதமர் மோடி நட்பு பாராட்டியதால் அவற்றில் பணிபுரிவோர் பிரதமர் மோடியை விமர்சிக்க அஞ்சியதாகவும், மோடிக்கு எதிராக செய்தி வெளியிடுவோரை மிரட்டும் செயலில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடக பெண் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதை RSF அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. பத்திரிகை சுதந்திரம் உள்ள 18 0 நாடுகளின் இந்தியாவுக்கு 142ம் இடமே கிடைத்துள்ளது. அதேபோல், இந்த பட்டியலில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாமு, சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பிரேசிலின் அதிபர் சயீர் பொல்சனாரூ, ஹங்கேரியின் விக்டர் ஆர்பன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Also Read: “தனது கூட்டுக் களவாணிகளுக்காகவே கூட்டுறவுத்துறைக்கு தனி அமைச்சம்.. உருவாகிய மோடி அரசு” : யெச்சூரி சாடல்!