India
பாலியல் தொல்லை செய்த பாஜகவினர்; பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உ.பி பெண் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் மோனா திவேதி. இவர் வெள்ளியன்று வீட்டில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். பின்னர் துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் அவரின் அறைக்குச் சென்ற போது மோனா திவேதி இரத்த வெள்ளத்தில் கடந்துள்ளார்.
பின்னர் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து போலிஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக மோனா திவேதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மூன்று பக்கம் கடிதம் எழுதி அதை வாட்ஸ் அப் மூலம் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பெண்களுக்கு, முதலில் அவர்களின் வீடுகளில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பிரதமர் மோடிக்கு மோனா திவேதி எழுதிய கடிதத்தில், "ஆளும் பாஜக கட்சித் தொண்டர்களாக இருக்கும் எனது கணவரின் சகோதரர்கள் அம்புஜா மற்றும் பங்கஜ் ஆகியோரால் மன மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகினேன். அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.
நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் என்னை அடித்து துன்புறுத்துவார்கள். என்னுடைய தாய் நான் சிறுவயதாக இருக்கும் போதே இறந்துவிட்டார். எனது தந்தை மதுபோதைக்கு அடிமையானர். எனக்கு 16 வயது இருக்கும் போது, எனக்கு திருமணம் செய்து வைத்தனர். கணவரின் சகோதரர்களால் துன்புறுத்தப்பட்ட நான், நடந்த சம்பவத்தை என் கணவரிடம் கூட சொல்ல முடியவில்லை.
காரணம், அவர் என்னை வீட்டை விட்டு துரத்திவிடுவார் என்று பயந்தேன். எனவே, பிரதமர் மோடி அய்யா அவர்களே, இந்தியப் பெண்களுக்கு அவர்களின் வீடுகளில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுங்கள்’ என்று உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை கைப்பற்றி மோனா திவேதியின் கணவர் மற்றும் அவரது சகோதரர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரதமர் மோடிக்கே தற்கொலை கடிதம் எழுதிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!
-
288 Iconic Projects : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்!
-
கம்பீரின் ஆதரவால் அணிக்குள் வந்தாரா ஆயுஷ் பதோனி? - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு!
-
சென்னையில் 1980-களை நினைவுபடுத்தும் ‘VINTAGE BUS’! - மக்கள் பயன்பாட்டிற்காக 5 பேருந்துகள் அறிமுகம்!