India
3 வாரத்தில் 2,100 பேர் பலி; 31,000 பேர் பாதிப்பு: கொரோனாவோடு இந்தியாவை மிரட்டும் கருப்பு பூஞ்சை நோய்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வேலையில், கருப்பு பூஞ்சை நோயும் நாடு முழுவதும் பரவி வருவது மருத்துவர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.
கருப்பு பூஞ்சை நோய் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களையே தாக்கி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த நோய்க்கு நாடு முழுவதும் Amphotericin-B என்ற மருந்து தட்டுப்பாடு இருப்பதால் உயிரிழப்பு அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் நாடு முழுவதும் 31,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 3 வாரங்களில் மட்டும் 2109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கடந்த 3 வாரத்தில் மட்டும் 150 சதம் பாதிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் 7,057 பேர் கருப்பு பூச்சை நோயால் பாதிக்கப்பட்டதில் 606 பேர் உயிரிழந்துள்ளார். குஜராத்தில் 5418 பேர் பாதிக்கப்பட்டதில் 323 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்றிய மோடி அரசு கொரோனாவை அலட்சியத்துடன் கையாண்டு மக்களை காவு கொடுத்தது போன்று பூஞ்சை நோய்களுக்கும் பலி கொடுக்கப் போகிறதா என்றும் பல்வேறு தரப்பிடம் இருந்து கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்