India
“இன்னும் எத்தனை வழிகளில் இந்தியாவை கொள்ளையடிக்கப் போகிறது பா.ஜ.க?” - ராகுல் சாடல்!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பா.ஜ.க அரசு பெட்ரால்- டீசல் மீதான கலால் வரியை 32 ரூபாய் என உயர்த்தியதாலேயே எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாகவும், பெட்ரால்- டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
உச்சம் தொட்டு வரும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் பங்கேற்கவிருந்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். தமிழ்நாட்டில், சென்னை, கோவை என 142 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜி.டி.பி நொறுங்கியது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை விண்ணை முட்டியுள்ளது. இன்னும் எத்தனை வழிகளில் இந்தியாவை பா.ஜ.க கொள்ளையடிக்கப் போகிறது?” எனக் கேள்வி எழுப்பி ஒன்றிய பா.ஜ.க அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !