India
“கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் செயல்திறனை கண்டறிய ஆய்வு” - ICMR முடிவு!
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இதுவரை 20 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்தும், அவற்றின் கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகள் குறித்தும் ஐ.சி.எம்.ஆர் அமைப்பு ஆய்வு செய்ய உள்ளது.
இதுகுறித்து சென்னையில் உள்ள ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் தேசிய தொற்றுநோய்வியல் அமைப்பின் மூத்த விஞ்ஞானி மருத்துவர் தருண் பட்நாகர், “45 வயதுக்கு மேற்பட்ட 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களிடம் ஐ.சி.எம்.ஆர் அமைப்பு தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த உள்ளது.
முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என இருதரப்பினரிடம் பிரித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.
இந்த ஆய்வுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெறுவோர் ஆகியோரின் தடுப்பூசி நிலவரம் ஆகியவையும் கணக்கிடப்படும்.
கொரோனா வைரஸை தீவிரம் அடையவிடாமல் தடுப்பூசி எந்த அளவு தடுக்கிறது, எந்த அளவுக்கு வீரியமாக தடுப்பூசி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
நாட்டில் இரு தடுப்பூசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் முதல்முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வு அடுத்தவாரத்திலிருந்து தொடங்கலாம்.
கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட் எவ்வாறு செயல்படுகிறது, கோவாக்சின் எவ்வாறு செயல்படுகிறது என்ற ஒப்பீடும் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!