India
‘தடுப்பூசிகளை ஏன் வெளிநாட்டிற்கு விற்றீர்கள்’; மோடியை விமர்சித்து டெல்லி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்!
கொரோனா பெருந்தொற்றில் இந்தியா சிக்கித் திணறி வருகிறது. டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிதீவிரமாகப் பரவி வருகிறது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதே வேலையில், தடுப்பூசிகளும் மக்களுக்குப் போடப்பட்டு வருகிறது.
கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தற்போது ஒரே ஆயுதமாகத் தடுப்பூசி கருதப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதில் கோட்டை விட்டதால், நாடு முழுவதும் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த தலைநகர் டெல்லியில், பிரதமர் மோடியைக் கண்டித்து மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளில் "நம்முடைய குழந்தைகளுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்" என்றே கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இப்படி டெல்லி முழுவதுமே பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சுவரொட்டிகளை ஒட்டியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக 17 பேரை கைது செய்த போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!