இந்தியா

"ஏன் இந்த தாமதம்? இத்தனை உயிரிழப்புகளுக்கும் யார் பொறுப்பேற்பது?” - மோடி அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி!

“கோவாக்சின் தடுப்பூசியை மற்ற மருந்து நிறுவனங்களும் தயாரிக்க அனுமதிப்பதில் ஏன் தாமதம் ஏற்பட்டது?” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஏன் இந்த தாமதம்? இத்தனை உயிரிழப்புகளுக்கும் யார் பொறுப்பேற்பது?” - மோடி அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“கோவாக்சின் தடுப்பூசியை மற்ற மருந்து நிறுவனங்களும் தயாரிக்க அனுமதிப்பதில் ஏன் தாமதம் ஏற்பட்டது? இடைப்பட்ட காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் யார் பொறுப்பேற்பது?” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவாக்சின் தடுப்பு மருந்து தயாரிப்பு உரிமையை ஒரு நிறுவனத்துக்கு மட்டும் வழங்காமல் பிற நிறுவனங்களுக்கும் வழங்கிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருந்தது.

ஆனால், காங்கிரஸ் கட்சி ஆலோசனை வழங்கி 4 வாரங்களுக்குப் பின்புதான் தற்போது வேறு நிறுவனங்களும் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மற்ற மருந்து நிறுவனங்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்கிடுங்கள் என காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசனை கூறி 4 வாரங்களுக்குப் பின் மற்ற நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் செய்த தாமதத்தால் தவிர்க்கமுடியாத பாதிப்புக்குள்ளான மக்கள், உயிரை இழந்த மக்களுக்கு யார் பொறுப்பேற்பது?

வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்டும், இதுவரை மத்திய அரசால் ஒரு வெளிநாட்டு உற்பத்தியாளரைக் கண்டறியவில்லை. மத்திய அரசு தொடர்ந்து மக்களிடம் பொய்யுரைத்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories