India

“தடுப்பூசி வழங்க முடியாவிட்டால் தற்கொலையா செய்துகொள்ள முடியும்”; பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் தடுப்பூசிகளுக்கும், அக்சிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகள், மத்திய அரசிடம் ஆக்சிஜன், தடுப்பூசிகள் கேட்டுத் தொடர் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ மவுனம் காத்தே வருகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது செய்தியாளார்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் இருக்கும் போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசின் அறிவிப்பு கண்துடைப்பாக உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, "நீதிமன்ற உத்தரவு படி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க முடியவில்லை.போதிய உற்பத்தி இல்லாததே இதற்குக் காரணம். இதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளவா முடியும்" என பேசினார். இவரின் இந்த பேச்சு செய்திளார்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “கொரோனா பேரிடரிலும் அநாகரிகமாக நடந்து கொள்ளும் யோகி அரசு”: உ.பி-யில் 16 மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!