India
“இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை பரவலை தவிர்க்க முடியாது” - எச்சரிக்கும் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்தே வருவது இந்தியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலையைத் தடுக்க முடியாது என்று மத்திய அரசின் அறிவியல் தலைமை ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயராகவன், "இந்தியாவிலும், உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் உருமாறிய கொரோனா குறித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் வெளிப்பாடாகவே கொரோனாவின் பரவில் குறித்து முன்னதாக எச்சரிக்கை விடுக்கவும் முயற்சி செய்துவருகிறோம். அதற்காகத் தீவிரமான ஆய்வுகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் நடைபெற்று வருகின்றன.
தற்போது தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. உருமாறிய கொரோனா உலகம் முழுவதும் மீண்டும் வரும். இந்தியாவிலும் வரும். உருமாறிய கொரேனா முந்தைய கொரோனாவைப் போலவே பரவுகிறது. முந்தைய கொரோனா வைரஸ் பரவிய அதே வழிமுறைகளிலேயே இந்த வைரஸ்கள் பரவுகின்றன.
மேலும் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. எப்போது மூன்றாவது கட்ட பரவல் நடைபெறும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நாம் புதிய அலையை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.
மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றின் பரவல் வேகம் சற்று குறைந்துள்ளது. ஆனால் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்கம், பீகார், ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும் பெங்களூரு, எர்ணாகுளம், கண்ணூர், கான்பூர் நகரங்களின் கொரோனா எண்ணிக்கை கனிசமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 16.5 கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!