India
“பா.ஜ.கவிற்கு ஆதரவு நிலைபாடு?.. தற்போதைய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்” : காங்கிரஸ் வலியுறுத்தல்!
தலைமை தேர்தல் ஆணையர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் புதிய விதிமுறைகளையும், தகுதியையும் வகுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார். மேலும் தொடர் சர்ச்சையில் சிக்கியுள்ள தற்போதைய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போன்றே, தற்போது நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ளது. மேற்கு வங்கத்துக்கு எட்டுகட்ட தேர்தலை அறிவித்தது முதலே பல அரசியல் கட்சிகள் பல கேள்விகளை எழுப்பினர்.
வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றி முகத்தில் இருந்த மமதாபானர்ஜி திடீரென 1736 வாக்குகள் வித்தியாசத்தில் நந்திகிராமில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான முடிவுக்கு உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆனந்த் சர்மா, உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வை அமைத்து தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க உரிய தகுதியையும், விதிமுறைகளையும் வகுத்து அறிவிக்க வேண்டும். தொடர் புகார்களுக்கு ஆளாகியுள்ள தற்போதைய ஆணையத்தை கலைத்து உத்தரவிட வேண்டும். தற்போதைய ஆணையர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!