India
“சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்க திட்டமிட்டார் அம்பேத்கர்” : தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பேச்சால் சர்ச்சை!
நாக்பூரில் உள்ள மராட்டிய தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் வகுப்பறை கட்டிட திறப்பு விழா, சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினமான நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கலந்துகொண்டார்.
இந்த விழாவில் பேசிய எஸ்.ஏ.பாப்டே, “இந்த விழாவில் எந்த மொழியில் பேச வேண்டும் என்பது குறித்து நான் யோசித்தேன். எந்த மொழியில் பேசவேண்டும் என்பது குறித்தான குழப்பம், நீண்ட நாட்களாக நம் நாட்டில் நிலவி வருகிறது. நீதிமன்றங்களின் அலுவல் மொழி தொடர்பான பிரச்னை அடிக்கடி எழுந்து வருகிறது.
இன்று டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள். பேசும்போது பயன்படுத்தவேண்டிய மொழிக்கும், வேலையின்போது பயன்படுத்தவேண்டிய மொழிக்கும் இடையேயான சச்சரவை இன்றைய நாள் எனக்கு நினைவூட்டுகிறது.
அதிகாரபூர்வ மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உயர்நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. சிலர், தமிழ், தெலுங்கு என நீதிமன்ற அலுவல் மொழியாக அவரவர் தாய்மொழியை விரும்புகிறார்கள்.
இந்த சிக்கல்கள் ஏற்படாதவாறு இருக்கவே, அம்பேத்கர் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கும் திட்டத்தை முன்மொழிய இருந்தார். வட இந்தியா அல்லது தென் இந்தியாவில் சமஸ்கிருதத்தை எதிர்ப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் அவர் இந்த திட்டத்தை யோசித்தார்.” எனக் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வரும் 23-ந் தேதி பணி ஓய்வு பெற இருக்கிறார். இந்நிலையில், இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !