India
“பாபர் மசூதி தீர்ப்புக்கு பரிசு?”- ஓய்வுபெற்ற நீதிபதியை லோக்ஆயுக்தா துணை தலைவராக நியமித்த யோகி ஆதித்யநாத்
பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், உத்தர பிரதேச லோக்ஆயுக்தா நீதிமன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த டிசம்பர் 6, 1992 இல் இடிக்கப்பட்டது. இதற்காக பா.ஜ.கவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கரசேவை நடத்தப்பட்டது. பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.கவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்ட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குகள் பதிவாகின.
இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து, சுமார் 2,300 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் வழங்கினார். அதில் அவர், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்திருந்தார்.
அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தீர்ப்பை அளித்த நாளன்றே நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் சுரேந்திர குமார் யாதவ் தற்போது உத்தர பிரதேச லோக்ஆயுக்தா நீதிமன்றத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை லோக்ஆயுக்தா நீதிமன்றத்தின் மூன்றாவது துணைத்தலைவராக நியமிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார்.
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகளில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்பான லோக் ஆயுக்தா துணை தலைவராக பா.ஜ.க-வுக்கு சாதகமாக தீர்ப்பளித்தவர் நியமிக்கப்பட்டிருப்பது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!