India
“வாக்கு சேகரிக்கவே வங்கதேச பயண நாடகம்” - மோடி விசாவை ரத்து செய்யக் கோரும் மம்தா பானர்ஜி!
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் பல இடங்களில், மோதல் சம்வவங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பா.ஜ.கவுக்கு வாக்குப் பதிவாவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறும் போது, பிரதமர் நரேந்திர மோடி வங்க தேசத்திற்குச் சென்றது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
பச்சிம் மெதினிபூர் மாவட்டம், காரக்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்த கொண்ட மம்தா பானர்ஜி, "மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற நாளில், பிரதமர் நரேந்திர மோடி வங்க சேதம் சென்று அங்கிருக்கும் குறிப்பிட்ட சமூகத்தினரை சந்தித்து, அவர்கள் மத்தியில் வங்க தேசத்தைப் பற்றி பேசியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, வங்கதேச நடிகர் காஜிப் அப்துல் நூர், திரிணாமுல் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பா.ஜ.க அரசு வங்க தேச அரசுடன் பேசி, இவரின் செயல் தேர்தல் விதிமுறை மீறல் என கூறி அவரது விசாவை ரத்து செய்து அராஜகமாக நடந்து கொண்டது.
ஆனால், தற்போது நரேந்திரே மோடி ஒரு பகுதி மக்களிடம் வாக்கு கேட்பதற்காக வங்க தேசத்திற்கே சென்றுள்ளார். இப்போது நீங்கள் சென்றது தேர்தல் விதிமுறை மீறல் இல்லையா? ஏன் உங்கள் விசாவை ரத்து செய்யக் கூடாது? இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்" என தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் மதுவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். இந்த சமூக வாக்குகளைக் கவர்வதற்காகத்தான் நநேரந்திர மோடி தேர்தல் நேரத்தில் வங்கதேச பயணத்தைத் திட்டமிட்டுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
சுகாதார அலுவலர்களுக்காக ரூ.4.05 கோடியில் 45 புதிய வாகனங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
உருவாகிறது புயல் : எப்போது?.. எங்கே?... தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பா?
-
“மலைத்தேனின் சுவையைப்போல நம்மிடையே வாழ்வார்!” - திமுக MLA பொன்னுசாமி மறைவுக்கு துணை முதலமைச்சர் அஞ்சலி!
-
மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த ‘தொல்காப்பியப் பூங்கா!’ : ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிப்பு!
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் 2 நாட்களில் 4.04 லட்சம் பேருக்கு உணவு ! - விவரம் உள்ளே!