India
“சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி... நந்திகிராமில் போட்டி” : திரிணாமுல் காங். வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
மேற்கு வங்கத்தில் மம்தாவை வீழ்த்தி ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என பா.ஜ.க பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய புள்ளிகளை விலைக்கு வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
மேலும் முக்கிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் சொந்த பலத்தில் களம் காண்கிறார் முதல்வர் மம்தா. அவரை பா.ஜ.க படுத்தும் பாட்டை கண்டு கோபமடைந்துள்ள வேறு மாநிலக் கட்சிகளும், தாமாக முன்வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மேலும், மேற்கு வங்கத்துக்கு மட்டும் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதும் பா.ஜ.கவின் கைங்கர்யமே எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 291 வேட்பாளர்களின் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். அந்தப் பட்டியலின்அடி, 50 பெண்கள், 42 இஸ்லாமியர்கள், 79 தாழ்த்தப்பட்டோர் மற்றும் 17 பழங்குடியின வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடவிருக்கிறார். சமீபத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.
அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என சுவேந்து சவால் விடுத்தார். இந்தச் சவாலை ஏற்று மம்தாவும் நந்திகிராமில் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார்.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!