India

"பணமதிப்பிழப்பால், முறைசாரா தொழிலை அழித்த மோடி " - மத்திய அரசை சாடிய மன்மோகன் சிங்!

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், அமைப்புசாரா துறையே சீரழிந்துவிட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் சார்பில், பிரதிக்‌ஷா 2030 என்ற தலைப்பில் பொருளாதாரக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் காணொலி மூலம், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கில், பா.ஜ.க அரசு கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வேலையின்மை அதிகரித்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசை கடுமையாகச் சாடி பேசினார். மேலும், அவர் பேசுகையில், "பொருளாதாரத்தைச் சீரமைக்க அரசு தற்காலிகமான நடவடிக்கையைத்தான் எடுத்துள்ளது. சிறு, மற்றும் நடுத்தரத் துறைகளுக்கு கடன் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமைப்புசாரா துறையில் வேலையின்மை மிகவும் அதிகரித்து, அந்த துறையையே சீரழித்துவிட்டது. இதற்குக் காரணம் 2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மோசமான பணமதிப்பு நீக்க நடவடிக்கைதான். அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அரசியல் கொள்கை மற்றும் இந்தியப் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு மூலக்கல்லாக இருப்பது கூட்டாட்சியும், மாநில அரசுகளுடன் தொடர் ஆலோசனையும்தான். ஆனால், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு இதை செய்வதாக நான் காணவில்லை என தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழக போக்குவரத்து துறையின் பெயரை ‘லஞ்சம் பெறும் துறை’ என மாற்றுக” - கொந்தளிக்கும் லாரி உரிமையாளர்கள்!