India

சாலை வரி செலுத்திய பிறகும் FASTag மூலம் கொள்ளையடிப்பதா? தனியாருக்கான அரசுதான் என நிரூபித்த பாஜக - CPIM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏறி வருகிறது. இதனை கண்டித்தும் இந்த விலை உயர்வை குறைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும் சுங்கச்சாவடிகளில் இன்று முத் ஃபாஸ்டேக் அமல்படுத்துவது பற்றி கூறும் போது வாகனங்களுக்கு சாலை வரி செலுத்திய பிறகும் சுங்கச்சாவடி அமைத்து அதில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது.

Also Read: 100ஐ தொட்ட பெட்ரோல் விலை : சாமானியர்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு - ஆதரவு கொடுக்கும் வலதுசாரிகள்

தற்போது அமல்படுத்தியது பகல் கொள்ளையில் பெரிய கொள்ளை இதுதான் என்றால் ஃபாஸ்டேக் என்ற போர்வையில் சில நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி வட்டியில்லாமல் முதலீடு பெரும் வகையில் மத்திய அரசு வழிவகுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாகன உரிமையாளர்கள் இதற்கு பணம் செலுத்தும்போது பயன்படுத்தாமல் அந்த நிறுவனத்தில் பணம் இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த மோடி அரசு தனியார் நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது இது ஒரு உதாரணம் என்றார்.

Also Read: ஒருபுறம் பெட்ரோல் டீசல் விலை.. மறுபுறம் ஃபாஸ்டேக்.. வரிந்து கட்டி வசூல் வேட்டை நடத்தும் பாஜக அரசு..!!