India
கோவாக்சின் தடுப்பூசியை நிராகரித்த சத்தீஸ்கர் அரசு : மருந்தில் காலாவதி தேதி இல்லை என குற்றச்சாட்டு!
மக்களை கொல்லும் கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து, தங்கள் நாட்டு மக்களுக்குச் செலுத்தி வருகின்றனர். இந்த வரிசையில், இந்தியாவும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பு மருந்துகளை 7 லட்சம் முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தும் விதமாக ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி மருந்து செலுத்தும் பணியைத் துவக்கியது.
இதனைத் தொடர்ந்து, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை மாநில வாரியாக பிரித்துக் கொடுத்தது மத்திய அரசு. இந்த மருந்துகளை அந்தந்த மாநில அரசுகளும், முன்கள பணியாளர்களுக்குச் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்னும் முடியாததால், அதன் செயல்திறன் இன்னும் உறுதியாகவில்லை என்றும் கோவாக்சின் தடுப்பூசி குப்பியில் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை என எங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மருந்து வேண்டாம் என மத்திய அரசிடம் சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது.
இதையடுத்து, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு மத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எழுதிய கடிதத்தில், தடுப்பூசி குப்பியில் காலாவதி தேதி இல்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!