India
“பா.ஜ.க அரசின் பி.எம் கிசான் திட்டத்தில் முறைகேடு - ரூ.1,364 கோடி நிதி மோசடி”: RTI-யில் அதிர்ச்சி தகவல்!
மோடி அரசு, முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது நடைமுறையில் இருந்த பல திட்டங்களை புதிதாக பெயர் வைத்து தங்கள் அரசின் புதிய திட்டம் என்று அறிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது.
அதன்படி கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவந்த நிதியுதவி திட்டத்தை ‘பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம்’ என்ற பெயரில் மோடி அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் இந்தத் திட்டத்தில் நாடுமுழுவதும் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருப்பதாக புகார்கள் கிளம்பின. அதன்படி தமிழகத்திலும் கூட சுமார் 110 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதேபோல், பா.ஜ.க ஆட்சி நடக்கும் இமாசலப் பிரதேசத்திலேயே, சுமார் 11 கோடியே 95 லட்சம் ரூபாய் அளவிற்கு, மோசடி நடந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தொடர் முறைகேடு புகார்களை அடுத்து, தற்போது தகுதியில்லாத விவசாயிகள் சுமார் 20 லட்சம் பேருக்கு ரூ.1,364 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.
மனித உரிமை ஆர்வலரான வெங்கடேஷ் நாயக் என்பவர், தனக்கு ஆர்.டி.ஐ மூலம் கிடைத்த தகவல் குறித்துப் பேசுகையில், “பி.எம் கிசான் திட்டத்தின் மூலம் இரு பிரிவுகளில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில், தகுதியற்ற விவசாயிகள், வருமான வரி செலுத்தும் விவசாயிகள் இரு பிரிவினரும் நிதியுதவி பெற்றுள்ளது ஆர்.டிஐ மனுவில் தெரியவந்துள்ளது.
மேலும் அதில், தகுதியற்ற விவசாயிகளில் நிதியுதவி பெற்றதில் 55.58 சதவீதம் பேர் வருமான வரி செலுத்துவோர் என்றும் மீதமுள்ள 44.41 சதவீதம் பேர் தகுதியற்ற பிரிவில் வரும் விவசாயிகள் என்றும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 2020, ஜூலை 31 ஆம் தேதி வரை தகுதியற்ற விவசாயிகளுக்கும், வருமான வரி செலுத்தும் விவசாயிகளுக்கும் சுமார் 1,364.13 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அரசின் சார்பில் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களே, இந்த நிதியுதவி தவறானவர்கள் கைகளுக்குச் சென்றுள்ளதைக் காட்டுகிறது.
இதன் மூலம் பெரும்பாலும் பா.ஜ.க ஆளும் அசாம், உத்தர பிரதேசம், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிக பலன்களை அனுபவித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!