India
“இது வெளிநாடு அல்ல; கேரளாதான்” : ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் புதிய பூங்கா!
சமூக வலைதளங்களில் வெளியான பூங்கா புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் பலரையும் கவர்ந்துள்ளது. அந்த புகைப்படத்தைப் பார்ப்போர் அனைவரும் இது வெளிநாடா இல்லை கேரளாவா என்ற ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு தற்போது மக்கள் நடமாட்டம் நாடு முழுவதுமே அதிகரித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொருளாதார நெருக்கடி, வேலை இழப்பு என மக்கள் இன்னும் இறுக்கமான மனநிலையிலேயே இருந்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவத்துறையில் மிகப்பெரிய சுகாதாரக் கட்டமைப்பை மக்களுக்காக உருவாகிய மாநிலம் என்றால், அது கேரளாதான். எளிய மக்களுக்கு சானிடைசர்.. முகக் கவசம்.. உணவு என தொடங்கி கொரோனா தடுப்பு மருந்துகள் என அனைத்தையும் இலவசமாக வழங்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முனைப்புக் காட்டியது கேரள அரசு.
இந்நிலையில் தற்போது ஒருபடிமேலே சென்று, மக்களிடம் உள்ள இறுக்கத்தையும், வெறுப்புணர்ச்சியையும் போக்கும் நடவடிக்கையாக சில திட்டங்களைக் கேரளாவில் அம்மாநில அரசு கொண்டு வருகிறது. குறிப்பாக மாநிலம் முழுவதும் செயல்படும் பூங்காக்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட்டுள்ளது அம்மாநில அரசு.
இந்நிலையில், கேரளாவின் கரக்காடு கிராமத்தில் புதிதாக வக்பதானந்தா பூங்கா திறக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான பூங்கா புகைப்படம் நெட்டிசன்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
இந்தப் பூங்கா கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகில் கரக்காடு கிராமத்தில் வக்பதானந்தா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.
இந்த பூங்கா உரலுங்கல் தொழிலாளர் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 2.80 கோடி செலவில் நிறுவிப்பட்டுள்ள இந்த பூங்காவில் திறந்த மேடை, பேட்மிண்டன் ஆடுகளம், திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம், குழந்தைகள் பூங்கா, ஓய்வறைகள் மரத்தடியில் அமர்ந்து புத்தகம் படிப்பதற்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது விரிவான பார்க்கிங் வசதியுடன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. 1885-1939 காலத்தில் கேரளாவின் மறுமலர்ச்சிக்காக போராடிய வக்பதானந்தா என்ற கேரளாவின் மூத்த தலைவரை கவுரவிக்கும் வகையில், இந்த பூங்காவிற்கு அவரது பெயரை கேரள அரசு சூட்டியுள்ளது.
கேரளாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பூங்காவிற்குச் செல்லும் மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். மக்கள் பலரும் இந்த பூங்காவிற்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!