India
“வேளாண் சட்டத்தால் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள்” - விவசாயிகள் வேதனை!
ஜனநாயக நெறிமுறைகளை கையாளாமல் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி மூன்று புதிய வேளாண் சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் முழுக்க முழுக்க வேளாண் துறையை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாகவே உள்ளது என்று விவசாயம் தனியார் வசம் சென்றால் வரலாறு காணாத விலைவாசி உயரும் என்றும் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரால் எதிர்க்கப்பட்டு வருகிறது.
டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து 38வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாளை மறுநாள் (ஜனவரி 4) நடைபெறும் ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்றால் டெல்லி, ஹரியானா மாநிலங்களில் சுங்கச்சாவடி, பெட்ரோல் நிலையங்கள், வணிக நிறுவனங்கள் முன்பாக முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. முக்கிய கோரிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படுத்த முடியாது என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
Also Read: மீண்டும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு!
இதனிடையே அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு குறித்தும், தங்களது நிலைபாடு குதித்தும் இன்று நண்பகல் புதுடெல்லியில் உள்ள வேளாண்துறை அமைச்சகம் அருகே உள்ள இந்திய பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து அறிவிக்க இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இதனிடையே நேற்று மேலும் ஒரு விவசாயி உயிரிழந்திருக்கிறார். 57 வயதான கல்தான் சிங் என்பவர் காஜிப்பூர் போராட்டக்களத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு இலகுவாக எடுத்துக்கொள்கிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலையை இழக்க நேரிட்டால் ஆண்டுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். 15 ஆண்டுகளில் 45 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். அந்த நிலைமை வந்தால் சுமார் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!