India
வீராங்கனையிடம் லஞ்சம் கேட்டதாக ஸ்மிருதி இரானி மீது புகார்!
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங்.
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிப்பதற்காக தன்னிடம் லட்சம் கேட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மூன்று பேர் மீது வர்த்திகா சிங் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான வர்த்திகா சிங் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மூன்று பேர் மீது லஞ்சம் கேட்டதாக புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வர்த்திகா சிங் அளித்துள்ள புகாரில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் நெருங்கிய ஆதரவாளர்களான விஜய் குப்தா மற்றும் ரஞ்சித் சிங் ஆகியோர், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிப்பதற்காக தன்னிடம் ஒரு கோடி லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் அந்த தொகையை குறைத்து 25 லட்சம் கேட்டதாவும் குற்றம்சாட்டினார்.
அதுமட்டுமல்லாது, அமைச்சரின் ஆதரவாளராக இருக்கும் ஆண் ஒருவர் தன்னிடம் ஆபாசமாகப் பேசுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த நவம்பர் 23ம் தேதி அமேதி மாவட்டத்தில் உள்ள முசாபிர்கானா காவல்நிலையத்தில் வர்த்திகா சிங் மீது அமைச்சரின் ஆதரவாளர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், வர்த்திகா சிங் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வரும் ஜனவரி 2ம் தேதி எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக வர்த்திகா சிங்கின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!