India
சுற்றுச்சூழல் பாதிப்புகளை கணக்கில் கொள்ளாமல் EIA சட்டம் உருவாக்குவதா? - மத்திய அரசுக்கு NGT நோட்டீஸ்!
ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க, இனிமேல் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அவசியமில்லை என்ற மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவை எதிர்த்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ல் மத்திய சுற்றுச்சூழல் துறை திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. நிலம் மற்றும் கடற்பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனிமேல் மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற அவசியமில்லை என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது..
ஏற்கனவே, இத்திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமானதாக இருந்தது. மேலும் இத்திட்டங்களுக்கான அனுமதியை மத்திய அரசு தான் வழங்க முடியும் என்றிருந்தது.
ஆனால் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் ஹைட்ரோகார்பன் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள அமைக்கப்படும் ஆய்வுக் கிணறுகளுக்கு மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டாம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த கே.ஆர்.செல்வராஜ்குமார் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை கணக்கில் கொள்ளாமலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட பிரிவுக்கு எதிராகவும் இத்திருத்தம் இருப்பதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய சுற்றுச்சூழல் துறை பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 1ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
Also Read
-
நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் திருவுருவச் சிலை... திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் பயிற்சி... எங்கு? எப்போது?
-
மாணாக்கர்களின் கல்விக்காக... அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள்.. - அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Epstein Files... மோடியால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் நிலைமை என்ன? - புட்டு புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி!
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!