India

விவசாயிகள் போராட்டத்தால் குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து? கொரோனாவை காரணம் காட்டும் மோடி அரசு..!

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத்தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

தற்போதைய விவசாயிகள் பிரச்சனை, பொருளாதார சூழ்நிலை, கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கு குளிர்கால கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியிருந்தார்.

Also Read: “டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு பா.ஜ.க கூட்டணி கட்சிகள் ஆதரவு” : நெருக்கடியை சந்திக்கும் மோடி அரசு !

இதற்கு பதிலளித்துள்ள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், கொரோனா பாதிப்பு காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் பட்ஜெட் கூட்டத்தொடரை முன் கூட்டியே ஜனவரி மாதத்திலேயே தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார்.

பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய ஏதுவாக கடந்த சில ஆண்டுகளாக ஜனவரி இறுதி வாரத்தில் நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. குளித்காலக்.கூட்டத் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மூன்றாம் வாரம் தொடங்கி டிசம்பர் மூன்றாம் வாரம் வரை நடைபெறுவது வழக்கம்.

இதனிடையே, வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் கடந்த 20 நாட்களாக போராடி வருவதன் காரணமாகவே குளிர்கால கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read: ஆத்மநிர்பார் திட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு.. ரூ.17 லட்சம் கோடியை ஏப்பம் விட்ட மோடி அரசு?