India
வேளாண் சட்டத்தை எதிர்த்து தன்னந்தனியாக போராடிய எட்டாம் வகுப்பு மாணவி... புதுச்சேரியில் நெகிழ்ச்சி!
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 19 நாட்களாக டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் குளிரில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை காக்காமல், மத்திய அரசு, முதுகில் குத்தும் செயலை கண்டிக்கும் விதமாக, புதுச்சேரி கடற்கரை சாலையில் இருக்கும் காந்தி சிலை முன்பு, பள்ளி சிறுமி ஒருவர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் 8ம் வகுப்பு மாணவியான தர்ஷினி, கையில் பதாகையை ஏந்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையறிந்த, புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்யா, அங்கு விரைந்து வந்து, அவரை சமாதானப்படுத்ததினார்.
அதைத்தொடர்ந்து அவர் தனது போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்தார். மத்திய அரசு, விவசாயிகளின் போராட்டத்திற்கு உடனடியாக தீர்வு காணவில்லை என்றால், அடுத்தகட்ட போராட்டத்தை, தனது தாய் தந்தையிடம் உரிய அனுமதி பெற்று பெரிய அளவில் நடத்துவேன் எனவும் அந்த சிறுமி கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘சமூகநீதி விடுதிகள்’ : முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் வரவேற்பு!
-
சமூகநீதி விடுதிகள் : "முதலமைச்சரின் சிறந்த சமூக நீதி சமத்துவ சிந்தனை இது" - கே.பாலகிருஷ்ணன் பாராட்டு !
-
4 மணி நேரம் - 10 துறைகள் குறித்து ஆய்வு : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியது என்ன?
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான 4 அறிக்கைகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய மாநில திட்டக்குழு!
-
”இருட்டில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!