India
“5 நாட்களாக தொடர்ந்து ஏறும் பெட்ரோல்; டீசல் விலை”: கண்டுகொள்ளாமல் மக்களை வதைக்கும் மத்திய-மாநில அரசுகள்!
உலகம் முழுவதுமே கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், தற்போது மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் விலைவாசி உயர்வினை மோடி அரசு கட்டுப்படுத்தாதன் விளைவு, மக்கள் மோசமான நிதி நிலைமையை சந்தித்து வருகின்றனர்.
இந்த சூழலில், பெட்ரோல் டீசல் விலையை வேறு நாள்தோறும் அதிகரிக்கின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன.
இந்த நிலையில் மே மாதத்தில் சர்வதேச அளவில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.
அதனால், இன்றைய பெட்ரோல் விலையை பொறுத்தவரை 86.02 ரூபாயாக உள்ளது. அதேபோல், டீசல் விலையை பொறுத்தவரை 78.72 ரூபாயாக உள்ளது. நேற்றைய விலையை ஒப்பிடுகையில், பெட்ரோல், டீசல் 24காசுகள் விலை உயர்ந்துள்ளது.
கடந்த 5 நாட்களை ஒப்பிடுகையில் பெட்ரோல் லிட்டருக்கு 70 காசுகளும், டீசல் லிட்டருக்கு 86 காசுகளும் விலை உயர்ந்துள்ளது. கடந்த 20 நாட்களை ஒப்பிடுகையில் 2 ரூபாயை நெருங்கி விலை உயர்ந்துள்ளதால் வாகனங்களில் செல்லும் சாமானிய மக்கள் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்வால் சாமானிய மக்கள் அன்றாட தேவையை பூர்த்தி செய்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, நாளுக்கு நாள் சில்லரை வகையில் விலை அதிகரித்தாலும், மாதம் முழுவதும் பார்க்கும் பொழுது விலையை சமாளிக்க முடியவில்லை என சாமானிய மக்கள் கூறுகின்றனர்.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!