India
இந்தியாவில் ஒரே நாளில் 41,322 பேர் பாதிப்பு: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.51 லட்சத்தை தாண்டியது! #COVID19
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 41,322 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 93,51,109 ஆக உயர்ந்திருக்கிறது.
ஒரே நாளில் 485 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,36,200 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 41,452 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 87,59,969 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 4,54,940 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 93.68% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.87% ஆக குறைந்துள்ளது.
Also Read
-
‘டோரதி’யின் வெற்றியும்... கலைஞர் போட்ட விதையும்! : தி.மு.க முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
“பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க நிர்வாகி பூபாலன், International Drug Mafia-வானதன் பின்னணி என்ன? - தி.மு.க ஐ.டி அணி கேள்வி!
-
“போதை பொருள் கடத்தலுக்கும், தவெக-வுக்கும் உள்ள தொடர்பு என்ன?” - முன்னாள் சபாநாயகர் அப்பாவு சரமாரி கேள்வி!
-
“யார்கிட்ட விளக்கம் கேட்க போறாரு?” - இந்து அறநிலையத்துறை Office உள்ளே புகுந்த மழைநீர்.. சேகர்பாபு கேள்வி!