தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,442 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 61,112 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,15,75,004 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 392 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,14,191 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 145 பேருக்கும், செங்கல்பட்டில் 77 பேருக்கும், சேலத்தில் 76 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று கொரோனா குணமடைந்து 1,494 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7,54,826 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 11,109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று தனியார் மருத்துவமனைகளில் 5 பேர், அரசு மருத்துவமனைகளில் 7 பேர் என 12 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11,681 ஆக அதிகரித்துள்ளது.