India

கொரோனாவோடு டெல்லியில் காற்று மாசும் தீவிரம்.. இன்று முதல் ஹைட்ரஜன் பேருந்து இயக்கம்!

டெல்லியில் தொடர்ந்து நீடித்து வரும் காற்று மாசை குறைப்பதற்கு ஏதுவாக ஹைட்ரஜன் அதிகமாக உள்ள புதிய சி.என்.ஜி எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதற்காக இஸ்ரோவும், டாடா நிறுவனமும் இணைந்து 50 பேருந்துகளை வடிவமைத்துள்ளனர். இது வெற்றி பெறும் நேரத்தில் டெல்லியில் இயங்கக்கூடிய மற்ற பேருந்துகள் ஆட்டோ டாக்சி போன்றவைகளும் இந்த ஹைட்ரஜன் சி.என்.ஜி மூலம் இயக்கப்படும் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்த 2001ஆம் ஆண்டு முதல் டெல்லியில் சிஎன்ஜி திட்டம் அமலுக்கு வந்தது. பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட 80% வாகனங்கள் சிஎன்ஜி மூலமே டெல்லியில் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வரும் சூழ்நிலையில், அடுத்த ஆண்டு முதல் டெல்லியில் இயங்கக்கூடிய அரசு பேருந்துகளை முழுமையாக மின்சார பேருந்துகளாக மாற்றி அமைக்கவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

Also Read: டெல்லி காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் காரணமா?: உண்மையை மறைக்கும் அரசு - குற்றம்சாட்டும் சூழலியலாளர்கள்!