India

“34 ஆண்டுகளாக ஏற்படாத சிக்கல் இப்போது” - கேரளாவைச் சேர்ந்த பெண்ணின் விநோத கவலை!

கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயர் ‘கொரோனா’ என்பதால் கொரோனா தொற்றுக் காலத்தில் அவர் பற்றிய தகவல் வைரலாகியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே ஒரு பெற்றோருக்கு 34 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு பாதிரியார் ஜேம்ஸ், ‘கொரோனா’ எனப் பெயர் சூட்டியுள்ளார். அதற்கு Crown என்று அர்த்தம் என்றும் கூறி உள்ளார்.

அந்தப் பெயர் பெற்றோருக்கும் பிடித்துவிடவே, அப்படியே அழைத்து வந்ததோடு, பள்ளியிலும் அந்தப் பெயரிலேயே சேர்த்துள்ளனர். இத்தனை ஆண்டு காலமாக அவருக்கு ஏற்படாத சோதனை கொரோனா தொற்று மூலம் ஏற்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் வைரஸின் பெயர் தனக்கு சூட்டப்பட்டதால் தற்போது படாதபாடுபட்டு வருவதாக எஸ்.கொரோனா வேடிக்கையாகத் கூறியுள்ளார்.

அடிக்கடி ரத்த தானம் செய்யும் பழக்கம் கொண்ட எஸ்.கொரோனா சமீபத்தில் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ முகாமில் ரத்த தானம் செய்ய பெயர் கொடுத்துள்ளார். அப்போது பெயரை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோன்று பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் எஸ்.கொரோனா தெரிவித்துள்ளார். தனது மகன்களே விளையாட்டாக கொரோனா அம்மா என்று அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து உ.பி. அலிகாரில் பட்டப்பகலில் நூதன கொள்ளை : வைரல் வீடியோ!