India
ஒரே நாளில் 96,550 பேர் பாதிப்பு; 1,209 பேர் பலி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மெத்தனம் காட்டும் மோடி அரசு
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 28,328,080 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 913,918 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.
உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 6,588,163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 196,328 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில், 96,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார்,1,209 பேர் பலியாகியுள்ளனர். இதனால், உலகளவில் கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது பிரேசிலை முந்திக்கொண்டு 2வது இடத்தை பிடித்திருக்கிறது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,65,863 லிருந்து 45,62,414 ஆக அதிகரித்துள்ளது அதேபோல்உயிரிழந்தோர் எண்ணிக்கை 75,062 லிருந்து, 76,271 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய கணக்குப்படி, கடந்த நான்கு நாட்களாக உயிரிழப்பு ஆயிரத்துக்கு மேல் உள்ளது. உயிரிழப்பு 1.70% ஆக அதிகரித்துள்ளது. இதில், 35.42 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !