India
“ஒரே நாளில் 86,432., 2 வாரங்களில் 10 லட்சம் பேர்” : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை தாண்டியது!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 26,795,701 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 878,963 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.
பிரேசில், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. அதேப்போல் 4வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 86,432 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில், 1,089 பேர் பலியாகியுள்ளார்.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40.23 லட்சத்தை தாண்டியது. இதுவரை இந்தியாவில் 40,23,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 69,561 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய கணக்குப்படி, கடந்த நான்கு நாட்களாக உயிரிழப்பு ஆயிரத்துக்கு மேல் உள்ளது. உயிரிழப்பு 1.89% ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், கடந்த இரண்டு வாரங்களில் 10 லட்சம் பேருக்குப் பாதிப்க்கப்பட்டுள்ளனர். அதே கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 76.53% பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!