India
மேற்கு வங்க கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்ற ஷின்சான் - புகாரின் பேரில் போலிஸ் விசாரணை!
கார்ட்டூன் கதாபாத்திரமான ஷின்சான் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் புதிதாக சேரும் மாணவர்களின் மெரிட் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
சில்குரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி மாணவர் சேர்க்கைக்கான மெரிட் பட்டியலில்தான் ஷின்சான் பெயர் முதலிடத்தில் வெளியாகியுள்ளது. இது யாரோ செய்த குறும்பு வேலை, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிதாக கல்லூரியில் சேரும் மாணவர்களின் ஆன்லைன் விண்ணப்பங்களைச் சரி பார்த்து அதிலிருந்து மெரிட் பட்டியலை தயாரிக்கும் பணியை அக்கல்லூரி நிர்வாகம் மற்றொரு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட மெரிட் பட்டியலில்தான் இப்படி ஷின்சானின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதேபோல் மற்றொரு கல்லூரியில் பாடகி நேகா காக்கரின் பெயர் பி.ஏ ஆங்கிலம் மெரிட் பட்டியலில் இடம்பெற்றது. அதுமட்டுமல்லாமல் பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர் மூன்று கல்லூரிகளின் மெரிட் லிஸ்டில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சைபர் கிரைம் போலிஸாரிடம் நான்கு கல்லூரிகளும் புகார் அளித்துள்ளன. தற்போதுள்ள தலைமுறை முந்தைய தலைமுறையை விட கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பயன்பாட்டில் நன்கு பரிச்சயம் பெற்றிருப்பதால் இதுபோன்ற குறும்பு வேலைகள் தற்போது நிறைய நடைபெறுகின்றன.
Also Read
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!