India
மதுபோதைக்காக தண்ணீரில் சானிடைசர் கலந்து குடித்த 3 பேர் பரிதாப பலி - ஆந்திராவில் மீண்டும் சோகம்!
ஆந்திராவில் மதுவகைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் மதுவிற்கு அடிமையானவர்கள் மது வாங்கமுடியாத சூழலில் மதுபோதைக்காக பல விபரீத முடிவுகளை கையில் எடுத்துள்ளனர். குறிப்பாக, இந்த கிருமிநாசினி திரவத்துடன் தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை சேர்த்து குடித்து போதை ஏற்றி வருகின்றனர்.
இந்த பழக்கம் ஆந்திராவின் பல மாவட்டங்களில் தொடார்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் 31ம் தேதியன்றி கூட ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிசேடு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மதுபோதையை அதிகமாக்க சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது மதுபோதைக்காக தண்ணீரில் சானிடைசரை கலந்து குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் மதுவாங்க பணம் இல்லாததால் குடிதண்ணீரில் சானிடைசரைக் கலந்துக் குடித்துள்ளனர்.
சானிடைசரைக் குடித்த சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன்றி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?