India
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17.50 லட்சத்தை தாண்டியது - ஒரே நாளில் 48,916 பேர் பாதிப்பு.. 757 பேர் பலி!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 18,020,684 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 688,913 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 4,764,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 157,898 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 54,735பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.853 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,364 ஆக அதிகரித்துள்ளது.
அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாட்டில் 11 லட்சத்துக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை முதல் தேதி அன்று 5,85,493 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அது தற்போது 17,50,723 ஆக உயர்ந்துள்ளது. அதேப்போல், ஜூலை மாதத்தில் மட்டும் 19,111 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது. இதனிடையே கொரோனா சோதனை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடி ஐந்து லட்சம் பேருக்கு (1,05,32,074) சோதனகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 1,93,58,659 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் இறுதிக்குள் நாளொன்றுக்கு ஒருலட்சம் பேருக்கு சோதனை நடத்த என்று இலக்கு நிர்ணயித்திருப்பதாக ஐ.சி எம்.ஆர் தெரிவித்துள்ளது.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!