India

கடந்த ஒரு மாதத்தில் 11.10 லட்சம் பேர் பாதிப்பு - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கியது!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 17,758,804 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 682,999 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 4,705,889 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 156,747 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கியது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 57,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நெற்றைய தினம் உயிரிழப்பு குறித்து வெளியிடாத நிலையில் இதனால் இந்தியாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,511ஆக அதிகரித்துள்ளது.

அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாட்டில் 11 லட்சத்துக்கு பத்தாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை முதல் தேதி அன்று 5,85,493 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அது தற்போது 16,95,988 ஆக உயர்ந்துள்ளது. அதேப்போல், ஜூலை மாதத்தில் மட்டும் 19,111 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது. இதனிடையே கொரோனா சோதனை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடி ஐந்து லட்சம் பேருக்கு (1,05,32,074) சோதனகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 1,93,58,659 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 5,25,689 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் இறுதிக்குள் நாளொன்றுக்கு ஒருலட்சம் பேருக்கு சோதனை நடத்த என்று இலக்கு நிர்ணயித்திருப்பதாக ஐ.சி எம்.ஆர் தெரிவித்துள்ளது.

Also Read: கொரோனா அச்சுறுத்தல்.. பொருளாதார வீழ்ச்சி : தோல்வி பயத்தால் அதிபர் தேர்தலை ஒத்திவைக்க டிரம்ப் திட்டம்?