India

“கொரோனா ஊரடங்கால் வாராக்கடன் மதிப்பு 8.5% இருந்து 14.5% அதிகரிக்கும்” : ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்தியாவில் ஏற்படிருக்கும் கொரோனா பாதிப்பை விட, இந்திய பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. முன்னதாகவே கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த இந்தியா கொரோனா ஊரடங்கால் மேலும் பலத்த அடிவாங்கியுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரையில் இந்திய வர்த்தகச் சந்தைகள் மீண்டுவர வாய்ப்பில் இல்லை என பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.

குறிப்பாக, இந்தியாவின் தென் பகுதியில் பொருளாதார வர்த்த நகரமாக இருக்கும் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களிலும் கொரோனா ஊரடங்கள் வர்த்தகச் சந்தை மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. இதே நிலைதான் நாடுமுழுவதும் உள்ள அனைத்து நகரங்களில் நீடிக்கிறது.

இந்த பாதிப்பின் காரணமாக இந்திய வங்கிகளில் வாராக்கடன் உயர்ந்து, வங்கியின் மூலதனம் காலியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனை 2 வாரம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திதாஸ் காந்தியும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இந்தியாவில் தற்போது மொத்தம் 12 லட்சம் கோடி கடன் நிலுவையில் இருக்கும் போது, சலுகை அறிவிக்கப்பட்ட 31ம் தேதிக்குப் பிறகும், 5ல் 1 பங்கு கடன் திரும்ப வரமுடியாமல் போனால் இந்திய வங்கிகளின் வாராக் கடன் அளவு சுமார் 20 லட்ச கோடி அளவிற்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த 20 லட்சம் கோடி என்பது தற்போதைய அளவைவிட 2 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் முடியும் சலுகைக்கு பிறகு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்தால் அதனை சமாளிக்க மத்திய அரசின் என்ன திட்டம் உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட கடந்த 4 மாதங்களில் வங்கி பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு மற்றும் கடன் நிலுவை குறித்து ஆய்வு செய்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றினை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையில், கடனை திருப்பி செலுத்த முடியாவதவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் சில திருத்தங்களை உலக அளவில் வங்கிகள் செய்திருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அதில், கடந்த மார்ச் 2020ல் 8.5 சதவீதமாக இருந்த வாராக்கடன் மதிப்பு, 2021 மார்சில் 12.5 சதவீதமாக உயரம் என தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த நெருக்கடி நிலை நீடித்தால், வாராக்கடன் மதிப்பு 14.7 சதவீதமாக அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தேசிய அளவில் நீண்ட காலம் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளதாகவும், அதன் விளைவாக வங்கிகளில் வாராக்கடன் விகிதம் அதிகரிக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இத்தகைய அறிவிப்பு முதலீட்டார்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பொருளாதார வீழ்ச்சி; இந்தியாவின் கடன் மொத்த GDPயில் 87.6% வரை அதிகரிக்கும்”: பொருளாதார வல்லுநர் அறிக்கை!