India

இந்தியாவில் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது - ஒரே நாளில் 49,310 பேருக்குப் கொரோனா தொற்று உறுதி!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 15,654,649 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 636,479 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 4,169,991பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 147,333 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12.87 லட்சத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 49,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 740 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,601 ஆக அதிகரித்துள்ளது.

அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் 1 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள சூழலில் நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதுள்ள நிலைமையைவிட மோசமானால் செப்டம்பர் மாதத்துக்குள் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என ஐ.ஐ.எஸ்.சி கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “இந்தியாவில் சமூக பரவலே இல்லையா? இது மெகா மோசடி” - மோடி அரசை சாடும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்! #Corona