Corona Virus

“இந்தியாவில் சமூக பரவலே இல்லையா? இது மெகா மோசடி” - மோடி அரசை சாடும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்! #Corona

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக அளவில் பரவவில்லை என தொடர்ந்து கூறி வருவது மிகப்பெரிய மோசடி என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் இல்லாத மாநிலங்களே இல்லாத அளவுக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவி வருகிறது. வைரஸ் தொற்றால் இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையோ 12 லட்சத்தை கடந்து நீண்டுக்கொண்டிருக்கிறது.

இருப்பினும் 3ம் கட்டமான சமூக பரவல் நிலையே இந்தியாவில் ஏற்படவில்லை என்ற மாய பிம்பத்தை கேரள அரசை தவிர மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன.

லட்சோப லட்சக்கணக்கான மக்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது கண்முன்னே தெரியும் போது சமூக அளவில் பரவவில்லை என கூறி வருவது நகைப்புக்குரியதாகவே உள்ளது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

யாரிடம் இருந்து யாருக்கு கொரோனா பரவியது? பரவியதற்கான காரணம் என்ன? தொற்று பாதிப்பு எப்படி தனக்கு ஏற்பட்டது என்பது கூட பல மக்களுக்கு தெரியவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

“இந்தியாவில் சமூக பரவலே இல்லையா? இது மெகா மோசடி” - மோடி அரசை சாடும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்! #Corona

நாட்டு மக்கள் தற்போது இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். சமூக பரவல் என ஒருவேளை அரசு ஒப்புக்கொண்டால் சிவப்பு, மஞ்சள் பச்சை என மண்டலங்களாக பிரிக்க வேண்டும்?

ஏன் கட்டுப்படுத்தப்பட்ட, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கேள்வி எழுப்புவர். அதன் காரணமாகவே சமூக பரவல் நிலையே இல்லை என அரசு மழுப்பி வருகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சமூகத்தின் கடைகோடி மக்கள் வரையிலும் வைரஸ் தொற்று பரவியுள்ளது எனும் நிலை நிலவும் போதும் அது சமூக பரவலாக மாறவில்லை எனக் கூறுவது மெகா மோசடியாகும் என காட்டமாக தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories