India
புதிதாக 34,884 பேருக்கு கொரோனா: முன்பு பொருளாதாரம்; தற்போது சுகாதாரம்.. மோடி அரசால் சீர்குலையும் இந்தியா!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை 38 ஆயிரத்தை கடந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்களின் படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 884 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்துகு 38 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 273 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே அதிகளவாக 671 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஆனால் ஒரே நாளில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 994 ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 53 ஆயிரத்து 751 ஆக உள்ளது.
இதையடுத்து 3.58 லட்சத்து 692 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2.92 லட்சத்து 589 பேரும், தமிழகத்தில் 1.60 லட்சத்து 907 பேரும், டெல்லியில் 1.20 லட்சத்து 107 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறு தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சகட்டத்திலேயே இருக்கும் நிலையில் கூட மத்திய பாஜக அரசு, சோதனைகளை தீவிரப்படுத்தும் பணியை முடுக்கிவிடாமல் உள்ளது.
அதேச்சமயத்தில், 10 ஆயிரத்துக்கும் மேலான பாதிப்புகளை கொண்டுள்ள கேரளாவில் கொரோனா சமூக அளவில் பரவிவிட்டது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார்.
ஆனால் நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், நாட்டில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை அடையவில்லை என மக்களை மேன்மேலும் ஏமாற்றி வருகிறது.
ஏற்கெனவே பொருளாதார நிலை கவலைக்கிடமாக உள்ள போது கொரோனாவால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்களுக்கு மேன்மேலும் இன்னல்களையே கொடுக்க மோடி அரசு முனைகிறதா எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!