India
“தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு” - பணிந்தது தேர்தல் ஆணையம்!
தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முடிவை நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் கைவிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்துக்கு வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, 65 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் தபால் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. தேர்தல் ஆணைய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதைக் கைவிட வலியுறுத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்கும் முறையை கொண்டுவரும் திட்டமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைப் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்களிக்க அனுமதி வழங்கியுள்ளது.
Also Read
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!