India

“சிறையில் போதிய சிகிச்சை இல்லை” : சமூக செயற்பாட்டாளர் வரவர ராவின் உடல்நிலை பாதிப்பு!

பா.ஜ.க அரசால் ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட 78 வயதான அரசியல் ஆர்வலரும், கவிஞரும், எழுத்தாளருமான வரவர ராவ் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த தகவல்களை சிறைத்துறை தடுத்து வருவதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் கடந்த மே28 அன்று வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்ததை தொடர்ந்து அவர் மும்பை ஜே.ஜே மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அதனையடுத்து மயக்க நிலையில் இருக்கும் போதே வரவர ராவ் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து தற்போது ராவிற்கு சிறையில் போதுமான பராமரிப்பு வழங்கப்படவில்லை என்றும் ஒத்திசைவு இயக்கத்தை இழக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவரது மகள் பவானா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வரவர ராவின் மகள் செய்தியார்களிடம் கூறியதாவது, “இன்று ராவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது, அவர் ஒரு நிமிடம் கூட பேசவில்லை. அவர் குரலில் உறுதி அற்ற நிலையே காணப்பட்டது. அதுமட்டுமல்லாது, அவரைக் கவனித்துக்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள சக குற்றவாளிகளில் ஒருவர், சிறந்த சிகிச்சைக்காக அவரை அவசரமாக மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று எங்களிடம்” தெரிவித்தார்” எனக் கூறியினார்.

இத்தகைய மோசமான சூழலில், முன்னதாக வரவர ராவின் மனைவி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் அவரை பிணையில் வெளியே விடக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரை விடுவிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசிய பா.ஜ.கவினர் கைது”: ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க பா.ஜ.க சதி!