இந்தியா

“ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசிய பா.ஜ.கவினர் கைது”: ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க பா.ஜ.க சதி!

ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய பா.ஜ.கவைச் சேர்ந்த இரண்டு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

“ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசிய பா.ஜ.கவினர் கைது”: ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க பா.ஜ.க சதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், 200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 107 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது காங்கிரஸ். மேலும், 12 சுயேச்சை உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராஷ்ட்ரிய லோக் தள், சி.பி.எம், பாரதிய ட்ரைபல் கட்சி ஆகியவற்றின் 5 உறுப்பினர்களும் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தானின் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளிக்க பா.ஜ.க முயற்சி செய்வதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களிடம் ஆட்சியை கவிழ்க பேரம் பேசிய பா.ஜ.கவைச் சேர்ந்த அசோக் சிங், பாரத் மலானி என்பவரைகளை அம்மாநில போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

“ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசிய பா.ஜ.கவினர் கைது”: ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க பா.ஜ.க சதி!

அதுமட்டுமல்லாது கட்சி மாறி வாக்களிக்க காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சுயேச்சை எம்.எல்.ஏக்கள் மூன்று பேரையும் அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கொரோனா பேரிடர் நேரத்தில் கூட ஆட்சியை கவிழ்க பா.ஜ.க சதி செய்வது அரசியல் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories