India

“100 நாள் கடந்துவிட்டது; இன்னும் நீங்கள் சொன்ன 21 நாட்கள் வரவில்லையா பிரதமரே?” - சிவசேனா கடும் விமர்சனம்!

கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து இந்தியாவில் மார்ச் 25ம் தேதி முதல் தேசிய அளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 4 கட்டங்களாக நடைமுறையில் இருந்தது. மற்ற நாடுகளில் ஊரடங்குகளின் போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்தபோதே நோய்த் தொற்று கட்டுக்கடங்காமல் பரவியது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய வசதி ஏற்படுத்தித் தராத காரணத்தால் கால்கடுக்க பல நூறு கிலோ மீட்டர்களுக்கு நடந்தே சென்றனர். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான நிதியுதவி அளிக்காமல் அவர்கள் மீது மேன்மேலும் கடன் சுமை ஏற்றுவது போன்ற பல்வேறு குளறுபடிகளையே செய்யது மத்திய மோடி அரசு.

Modi

மகாபாரதப் போர் வெற்றியடைய 18 நாட்கள் ஆனது போன்று இந்த கொரோனாவை 21 நாட்களில் வென்றிடுவோம் என மார்ச் மாதம் பிரதமர் மோடி பேசியிருந்தார். ஊரடங்கு தொடங்கும்போது 600 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 100வது நாளை எட்டியபோது 6 லட்சமாக அதிகரித்தது.

தற்போது முதல் 10, 5 என்ற பட்டியலை தகர்த்தெறிந்து உலகளவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3வது நாடாக இந்தியா உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி புரியும் சிவசேனாவின் ’சாம்னா’ பத்திரிகை இதுதொடர்பான தலையங்கம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில், 21 நாட்களில் கொரோனாவை வெல்வோம் எனக் கூறினார் பிரதமர் மோடி. ஆனால் 100 நாட்களைக் கடந்த பின்னும் கொரோனாவுக்கு எதிரான போர் முடிந்தபாடில்லை. இந்தப் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்கள வீரர்களும் சோர்வடைந்தும் பாதிக்கப்பட்டும் வருகிறார்கள்.

இன்னும் எத்தனை நாட்களுக்குதான் நாட்டையும் நாட்டு மக்களையும் பூட்டி வைப்பது? 2021ம் ஆண்டுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து வெகுஜன பயன்பாட்டுக்கு வராது என அரசு கூறியுள்ளது. இதற்கு அர்த்தம், அதுவரையில் கொரோனாவுடன் வாழ்ந்தாக வேண்டுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Also Read: “மோடி அரசின் தோல்விகளே ஹார்வர்டு வர்த்தக பள்ளியின் எதிர்கால ஆய்வு” - பட்டியலிட்ட ராகுல் காந்தி!