India
“சீனா ஒரு எதிர்ப்பாளர்தான்; நம் உண்மையான பெரிய எதிரி பா.ஜ.கதான்” : மோடி அரசை கடுமையாக சாடிய ஆகார் படேல்!
லடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின.
இந்நிலையில், லடாக் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கும் வகையில் பிரதமர் மோடி நேற்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இந்நிலையில் முன்னதாக பிரதமர் மோடி இந்தியா அமைதியையே விரும்புகிறது, ஆனால் தொடர்ந்து சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, சீனப் பொருட்களைப் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும் எனவும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் பா.ஜ.க ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா பேரிடரில் இருந்து மக்கள் பாதுகாப்பத்தில் தோல்வி அடைந்ததால் மோடி அரசு சீன பிரச்சனையை கையில் எடுத்து அரசியல் செய்வதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், சீனாவை விட பெரிய எதிரி பாஜக-தான் என முன்னாள் அம்னெஸ்டி இந்தியா தலைவர் ஆகார் படேல் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆகார் படேல் வெளியிட்டு ட்விட்டர் பதிவில், “சீனா ஒரு எதிர்ப்பாளர்தான். ஆனால் நம் உண்மையான எதிரி விரோதி பா.ஜ.க தான். சீனாவிற்கு உத்திரீதியான குறிக்கோள் உள்ளது. சீனா நம்மை உள்ளிருந்து கொடுப்பதில்லை; ஆனால் பா.ஜ.க நம்முடன் இருந்துக்கொண்டு உள்ளிருந்தே நம்மைக் கெடுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு வந்தலும் பா.ஜ.கவினர் ஆகார் படேல் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!