India
கொரோனா பேரிடர் கால நிதி உதவி வழங்க உத்தரவிடக்கூடாது: மக்கள் நலப் பணியாளர்களுக்கு எதிராக தமிழக அரசு வாதம்!
பணி இல்லாமல் இருக்கும் தங்களுக்கும் கொரொனா பேரிடர் உதவிகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுமீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் பணியில்லாமல் இருக்கும் அவர்களுக்கும் இந்த பேரிடர் காலத்தில் நிவாரண உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே கொரோனா பணிகளுக்காக புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்டுவருவதாகவும் வில்சன் தெரிவித்தார். அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், மூல வழக்கு நிலுவையில் இருக்கும் போது கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவு எதும் நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் நலப்பணியாளர்கள் 11,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை செப்டம்பர் மாதம் விசாரணக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !