India
“உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு - பீகார் தேர்தலை நோக்கி நகரும் அமித்ஷா” : மோடி அரசின் சுயரூபம் அம்பலம்!
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையின் பதவிக் காலம் இந்தாண்டு இறுதியில் முடிவடைது.
அதனால், பீகார் மாநிலத்துக்கு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தக்கப்பட்டாக வேண்டும் என்ற சூழல் உள்ளது. ஆனால், கொரோனா தொற்றுப் பரவால் காரணமாக தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பிருக்குமா? என்ற சந்தேகம் நிலவிவருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, மூன்று மாதங்கள் முன்னதாக ஜூனிலேயே பிரச்சாரத்திற்கு தயாராகி விட்டாதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் ஜூன் 9 அன்று ஆன்லைன் மூலம் அமித்ஷா பிரச்சாரத்தைத் துவங்க உள்ளதாக பா.ஜ.க தலைமை அறிவித்துள்ளது.
ஒரு தொகுதிக்கு 1 லட்சம் பேர் என்ற வகையில், பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் உள்ள மக்களிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் அமித்ஷா பிரச்சார உரை நிகழ்த்த உள்ளதாக பீகார் மாநில பா.ஜ.க தலைவர் சஞ்சய் ஜெய்சுவால் கூறியிருக்கிறார்.
நாட்டில் கொரோனோ தொற்று, இரட்டிப்பு வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இறப்பு விகிதம் உயர்ந்து கொண்டே செல்கிறது. மறுபுறத்தில் தொழில் முடக்கம், வேலையின்மை காரணமாக வறுமையும் அதிகரித்து வருகிறது.
மத்தியில் ஆளும்கட்சி என்ற வகையில், இப்பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு பா.ஜ.கவுக்கும் அதன் தலைவர்களுக்கும் உள்ளது. ஆனால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு அதுபற்றிய அக் கறை எதுவும் இல்லை. இந்நிலையில், அமித்ஷாவும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டது, விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
Also Read
-
135 கிலோ போதைப் பொருள் : அன்று தவெக அமைச்சரை விஜய் காப்பற்றியதன் விளைவு, இன்று.. - கனிமொழி MP தாக்கு!
-
மேலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி வலியுறுத்தல்!
-
“இணையத்தை குழந்தைகள் பயன்படுத்துவது அடிப்படை உரிமை” : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
கானா பாடலின் முகவரி.. பட்டி தொட்டி எங்கும் ஒலித்த தேவா ஹிட்ஸ்.. காற்றில் கலந்தார் ‘தேனிசைத் தென்றல்’!
-
“வெள்ளை மனம் கொண்ட தேவா.. கானா என்றாலே தேவா தான்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்!