India

"ரீசார்ஜ் செய்ய மறுத்த பெற்றோர்” - மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய பெற்றோர் மறுத்ததால் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 20 வயது இளைஞர் ஒருவர் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பப் புரட்சியால் தற்போது குழந்தைகள் கூட செல்போன்களை அதிகமாக உபயோகிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இணையம் உள்ளிட்ட தொழில்நுட்பப் பயன்பாடுகள் மனிதர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவும் நிலையில் சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில், செல்போனில் இணையதள இணைப்புக்காக ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று போபாலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் பெற்றோரிடம் கேட்க அவர்கள் மறுத்துள்ளனர். இதனையடுத்து மனமுடைந்த அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போபால் காவல்நிலைய அதிகாரி எஸ்.ஷர்மா கூறும்போது, “தன் பெற்றோரிடம் ரீசார்ஜ் செய்து தரக்கோரி அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். அவர்கள் மறுத்தனர். ஏன் மறுத்தனர் என்று தெரியவில்லை, இதன் வெறுப்பில் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலதிக விவரங்கள் தெரியவரும்.

Also Read: “கையில் 1 ரூபாய் கூட இல்லை... வேலையும் பறிபோனது” - 7 நாட்கள் பயணித்து ஊர் திரும்பிய தொழிலாளி தற்கொலை!