India
“இயற்கை எழில்மிகு மலையில் 80 குடிசைகள்” : வெளிமாநிலங்களிலிருந்து வரும் மக்களை தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 86 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் மணிப்பூர் மாநிலம் சேனாபதி மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி நிர்வாகம் 80 குடிசைகளைக் கட்டியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் பூர்வீக மக்களை தங்க வைப்பதற்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்காக இந்தக் குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்பாலுக்கு வடக்கே சுமார் 118 கி.மீ தொலைவில் உள்ள துங்ஜோய் கிராமத்தில் குடிசைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த 80 குடிசைகளும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் 600 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிராம ஊராட்சி நிர்வாகத்தின் உதவி, உள்ளூரில் கிடைத்த பொருட்களுடன் இந்தப் பணி நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு குடிசையிலும் ஒரு படுக்கை, தனி கழிப்பறை, எரிவாயு வசதி, சார்ஜிங் சாக்கெட் மூலம் மின்சாரம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிசையிலும் ஒரு நபர் தங்க வைக்கப்படுவார்.
தேவைப்பட்டால் ஒரு குடும்பம் இரண்டு குடிசைகளை பயன்படுத்தலாம் என்று துங்ஜோய் கிராம ஊராட்சித் தலைவர் எம்.எஸ்.மார்கஸ் தெரிவித்துள்ளார். துங்ஜோய் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் மணிப்பூருக்கு வெளியே சிக்கித் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் இரண்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலம் பெற்றுவிட்டனர். கடந்த 20 தினங்களுக்கும் மேலாக ஒரு நோயாளி கூட புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!